நண்பனுக்காக ரஷ்யாவை பழிவாங்க 8 நாட்கள் நடந்து உக்ரைனில் போரிட சென்ற பிரித்தானியர்
ரஷ்ய – உக்ரைன் போரில் நெருங்கிய நண்பரை இழந்த பிரித்தானியர், ரஷ்யாவை பழிவாங்க 300 km நடந்து உக்ரைனுக்கு சென்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நெருங்கிய நண்பர் கொல்லப்பட்டார்
ஸ்பெயின் நாட்டில் தங்கியிருந்து ஸ்பானிய மொழி கற்று வந்துள்ளார் 32 வயதான Marcus Smith. அப்போது தான் ட்ரோன் தாக்குதலில் தமது நெருங்கிய நண்பர் கொல்லப்பட்டார் என்ற துயரச் செய்தி அவருக்குக் கிடைத்தது.
உடனடியாக முடிவெடுத்த மார்கஸ் ஸ்மித் விமானத்தில் பார்சிலோனாவில் இருந்து புடாபெஸ்ட் புறபப்ட்டுள்ளார். ஆனால் தம்மிடம் இருந்த பணம் மொத்தம் செலவானதை அடுத்து 8 நாட்கள் நடந்து உக்ரைன் எல்லைக்கு சென்றுள்ளார்.
மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த மார்கஸ் ஸ்மித் உக்ரேனிய எல்லைப்படை வீரர்களின் உதவியுடன் உக்ரைனுக்கு சென்றுள்ளார். தற்போது உக்ரைன் ராணுவத்தில் பதிவு செய்து பயிற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
அத்துடன், தமது நண்பருக்காக ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட தாம் தயார் என்றும் தெரிவித்துள்ளார். புடாபெஸ்ட்டில் இருந்து சுமார் 300 கிலோமீற்றர் நடந்துள்ளார். 8 நாட்களுக்கு பின்னர் உக்ரைன் எல்லைக்கு சென்று சேர்ந்துள்ளார்.
நாடு திரும்பினால், தண்டிக்கப்படுவார்
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், உடல் திறனுடன் இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ள நிலையில், ராணுவத்தின் எந்தப் பிரிவில் இணைவது என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
உண்மையில், பிரித்தானியர்கள் உக்ரைனுக்கு புறப்பட்டு சென்று, உரிய அனுமதி இல்லாமல் போரில் கலந்துகொண்டு நாடு திரும்பினால், அவர்கள் தண்டிக்கப்படுவார் என்றே பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆனால் உக்ரைனில் உள்ள தமது நண்பருக்காக ரஷ்யாவை பழி வாங்குவதே தமது இலக்கு என்று தெரிவித்துள்ளார் மார்கஸ் ஸ்மித்.