பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (30.05.2024) மற்றும் நாளை மறுதினங்களில் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆசிரியர் சங்கங்களினால் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படும் நிலையில், பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என பல்வேறு தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை இன்று வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சின் கோரிக்கை
அத்துடன், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் சங்கங்களினால் நடாத்தப்படும் பணிப் பகிஷ்கரிப்பில் பிரதான ஆசிரியர் சங்கம் இணையாது எனவும் சங்கத்தின் நிர்வாகிகளால் கூறப்பட்டுள்ளது.
மேலும், பணிப் பகிஷ்கரிப்பினை தவிர்த்து மீண்டும் பணிக்கு திரும்புமாறும் தமது பிரச்சினைகளை அதிபர் நியமித்த நிபுணர் குழுவிடம் முன்வைக்குமாறும் கல்வி அமைச்சு ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.