மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
மின்சாரக் கட்டணங்களை 10 முதல் 20 வீதம் வரையில் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தனுஸ்க பராக்ரமசிங்க சிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைத்தால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத் திருத்தம்
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இது தொடர்பிலான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க அளவில் மின்சாரக் கட்டணங்களை குறைக்க முடியும் என தனுஸ்க தெரிவித்துள்ளார்.
மின்சாரசபையை மறுசீரமைக்கும் சட்டத்தின் ஊடாக மின்சாரக் கட்டணங்கள் உயர்வடையும் சாத்தியங்கள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.