;
Athirady Tamil News

தீவிரமடையும் போர்! இஸ்ரேலின் கோர தாக்குதலுக்கு எழுந்துள்ள கடும் கண்டனம்

0

காசாவின் (gaza) ரபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் (israel) நடத்திய தாக்குதலுக்கு தனது கடுமையான கண்டனத்தை ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வெளியிட்டுள்ளார்

அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது, இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

காசாவில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை, இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும் என அந்தோனியோ குத்தேரஸ் ( Antonio Guterres) குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவி மக்கள் மீது தாக்குதல்
இதேவேளை, மீண்டும் மீண்டும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த மக்களை காக்கும் வகையிலான நடவடிக்கையை இஸ்ரேல் எடுத்தாக வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் (UN Human Rights) உயர்மட்ட குழுவின் ஆணையர் டர்க் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்கள் வசம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் ஹமாஸ் உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரமான விளைவு
இந்நிலையில், ரபா மீதான இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடரக்கூடாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் (Australian Minister) பெனிவொங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தற்போது மனிதாபிமான யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் அதன் மூலம் பொதுமக்களை பாதுகாக்க முடியும் என்பதை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதல்கள் பயங்கரமான ஏற்றுக்கொள்ள முடியாத விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ள பெனிவொங் காசாவின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் தஞ்சமடைந்துள்ள ரபாவின் மீது இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கையை முன்னெடுக்க கூடாது என்பது குறித்து அவுஸ்திரேலியா தெளிவாக உள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள்

முன்னதாக, ரபா தற்காலிக முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தவறானது என்றும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

தெற்கு காசாவில் உள்ள ரபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் நேற்று முன்தினம் (மே 26) குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், 249 பேர் காயமடைந்துள்ளதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.