;
Athirady Tamil News

இஸ்ரேலுக்கு எதிராக உருவெடுத்த அந்த வார்த்தை: கொதித்தெழுந்த இந்தியா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள்

0

இஸ்ரேலுக்கு (Israel) எதிராக சமூக ஊடகங்களில் உலகம் முழுவதிலும் உள்ள பிரபலங்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பு நேற்று முன்தினம் ரொக்கெட் வீசி தாக்குதல்கள் நடத்தியது, இந்த தாக்குதலினால் உயிரிழப்புகளோ, பொருள்கள் சேதமோ ஏதும் ஏற்படவில்லை.

இதனை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினரின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரபா எல்லையில் இஸ்ரேல் கொடுரமான தாக்குதல் ஒன்றை நடத்தியது.

இஸ்ரேலின் தாக்குதல்
இஸ்ரேல் நடத்திய அந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 35 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேலின் இந்த கொடுரத்தனமான குறித்த தாக்குதலுக்கு எதிராக உலக நாடுகளில் உள்ள பிரபலங்கள்“All Eyes on Rafah”எனும் வார்த்தையை சமூக ஊடகங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், “All Eyes on Rafah” எனும் வார்த்தையை முதன் முதலாக உலக சுகாதார அமைப்பு அலுவலகத்தின் இயக்குநர் ரிக் பீபர்கார்ன் பயன்படுத்தியுள்ளார்.

இந்திய பிரபலங்கள்
இதனை தொடர்ந்து, இந்தியாவின் பிரபல சினிமா நட்சத்திரங்கள், இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் மற்றும் சர்வதேச பிரபலங்கள் வரை இந்த வார்த்தையை பயன்படுத்த தொங்கியுள்ளனர்.

அத்துடன், டிக்டொக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் இந்த வார்த்தையை 4 லட்சம் பேர் வரை இந்த வார்த்தயை பயன்படுத்தி பதிவிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.