2023இல் வரலாறு காணாத எண்ணிக்கையிலானவர்களுக்கு குடியுரிமை வழங்கிய ஜேர்மனி
ஜேர்மனி, வரலாறு காணாத அளவில், 2023ஆம் ஆண்டில் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது.
200,100 பேருக்கு குடியுரிமை
2023ஆம் ஆண்டில், ஜேர்மனி சுமார் 200,100 பேருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. ஒரே ஆண்டில் இத்தனை பேருக்கு முடியுரிமை வழங்கப்பட்டுள்ளது 2000ஆம் ஆண்டு பிறந்த பிறகு இதுவே முதன்முறையாகும்.
ஜேர்மனி, தனது குடியுரிமை மற்றும் இரட்டைக் குடியுரிமை விதிகளை எளிதாக்கியுள்ள நிலையில், அவை ஜூன் மாத இறுதியில்தான் அமுலுக்கு வர உள்ளன. ஆனால், அதற்கு முன்பாகவே இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
புதிதாக குடியுரிமை பெற்றவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவர்கள், சிரியா நாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவர்.
157 நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு ஜேர்மன் குடியுரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் அல்லது 56 சதவிகிதத்தினர் சிரியா, துருக்கி, ஈராக், ரொமேனியா அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.