திடீரென்று மரங்களில் இருந்து சுருண்டு விழுந்து இறக்கும் குரங்குகள்: கடும் வெப்பத்தால் தகிக்கும் ஒரு நாடு
மெக்சிகோவில் தீவிர வெப்ப அலை காரணமாக நூற்றுக்கணக்கான குரங்குகள் சுருண்டு விழுந்து இறப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெப்ப அலை காரணமாக
வடக்கு மெக்சிகோவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், குறைந்தபட்சம் நூறு கிளிகள், வெளவால்கள் மற்றும் பிற விலங்குகள் நீரிழப்பு காரணமாக இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மே 16 முதல் வளைகுடா கடற்கரை மாநிலமான தபாஸ்கோ பகுதியில் 138 குரங்குகள் வெப்ப அலை காரணமாக மரணமடைந்துள்ளதாக கடந்த வாரம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, திங்கட்கிழமை நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஞாயிறன்று வெளியான தகவலின் அடிப்படையில் இறந்த குரங்குகளின் எண்ணிக்கை 157 என ஆதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். வெப்ப அலை காரணமாக மட்டுமா இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பதை விசாரித்து வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
விலங்குகளை இழக்க நேரிடும்
இதனிடையே, 13 குரங்குகள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுவரை சிகிச்சைக்கு பின்னர் 7 குரங்குகள் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இப்படியான ஒரு நெருக்கடி ஏற்பட்டதில்லை என்றே உயிரியல் பூங்கா அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர். மேலும் வெப்ப அலை அதிகரிக்கும் என்றால், விலங்குகளை இழக்க நேரிடும் என்றே கூறுகின்றனர்.
இறந்த சில குரங்குகளுக்கு 130 பவுண்டுகள் வரையில் எடை இருந்தது என்றும், சுமார் 20 ஆண்டுகள் அவரையில் உயிர் வாழக்கூடியவை என்றும் தெரிவித்துள்ளனர்.