;
Athirady Tamil News

இந்த நகரங்களுக்கு இடம்பெயர விரும்பும் கனேடிய மக்கள்: விரிவான தகவல்

0

குடியிருப்புகளுக்கான விலை அதிகரித்து வருவதால், நாட்டின் பெரு நகரங்களில் வசிக்கும் சரிபாதி கனேடியர்கள் இடம்பெயர தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்த தொகைக்கு குடியிருப்பு
ரொறன்ரோ, மாண்ட்ரீல் மற்றும் வான்கூவர் போன்ற பெரிய பிராந்தியங்களில் வசிப்பவர்களில் ஐம்பது சதவீதம் பேர், தங்களுக்கு வேலை கிடைத்தால், விலை மலிவான நகரங்களில் வீடு வாங்குவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனர்.

வாடகைக்கு குடியிருப்பவர்களில் 60 சதவீதம் பேர்கள் இடம்பெயர முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குறைந்த தொகைக்கு குடியிருப்பு கிடைப்பது என்பது தற்போதைய சூழலில் சிக்கலாக உள்ளது என்பதுடன், கொரோனா பெருந்தொற்றானது மக்களை தங்கள் வசதிக்கு ஏற்ற வாழ்க்கை வாழவும் கற்றுக்கொடுத்துள்ளது என நிபுணர்கள் தரப்பு கூறுகின்றனர்.

மேலும், தற்போது வேறு நகரங்களுக்கு குடிபெயர முடிவு செய்துள்ளதாக கூறும் பலரும் தங்கள் முடிவை மாற்றவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடுகின்றனர். கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் வசிக்கும் மக்களில் 51 சதவீதம் பேர்கள் இடம்பெயர வேண்டும் என திட்டமிட்டு வருகின்றனர்.

பொருளாதார வசதிக்கு ஏற்ற நகரங்கள்
கிரேடர் மாண்ட்ரீல் பகுதி மக்களில் 54 சதவீதம் பேர்கள் மற்றும் கிரேட்டர் வான்கூவர் பகுதியில் 45 சதவீதம் மக்கள். மாண்ட்ரீல் பகுதி மக்களுக்கு கியூபெக் சிட்டி முதன்மை தெரிவாக உள்ளது.

ரொறன்ரோ மற்றும் வான்கூவர் பகுதி மக்கள் எட்மண்டன் பகுதியை தெரிவு செய்துள்ளனர். கனடாவில் பொருளாதார வசதிக்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் ஒன்ராறியோவின் Thunder Bay முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் Saint John. அடுத்து Red Deer, கியூபெக்கின் Trois-Rivières, எட்மண்டன், ரெஜினா, St. John’s, கியூபெக் சிட்டி, Sherbrooke மற்றும் வின்னிபெக் ஆகிய 10 நகரங்கள் மக்களின் விருப்பமாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.