தொடர் சர்ச்சையில் மைத்திரி: நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு
நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithripala Sirisena) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) செயற்குழு உறுப்பினர் மான்டேக் சரத்சந்திரவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிமன்ற உத்தரவு
குறித்த மனு தொடர்பான உண்மைகளை உறுதிப்படுத்துமாறு பிரதிவாதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் மனுதாரரின் சட்டத்தரணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுத்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தை மீறும் வகையில் செயற்பட்டு நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.