;
Athirady Tamil News

மண்சரிவு ஏற்படக்கூடிய அபாய பகுதிகளில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள்

0

மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் 300இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் அமைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த பகுதிகளில் அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மண்சரிவு அதி அபாய பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், மண்சரிவு அதி அபாய பகுதிகளில் பல்வேறு அரச நிறுவனங்களும் காணப்படுகின்றன.

இதேவேளை மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் சுமார் 14000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

அதில் 2600 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.