;
Athirady Tamil News

உலகை தாக்க தயாராகும் மற்றுமொரு தொற்று : இங்கிலாந்து விஞ்ஞானி கடும் எச்சரிக்கை

0

கொரோனா தொற்றை அடுத்து தற்போது வேறொரு பெருந்தொற்று உலகை தாக்க தயாராகி வருவதாக இங்கிலாந்தின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் சேர் பற்றிக் வாலன்ஸ்(Patrick Vallance )தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

“உலகில் அடுத்த பெருந்தொற்று வருவது உறுதி. எனவே அத்தொற்றை முன்கூட்டியே கண்டறிந்து அதை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இந்த நடவடிக்கையை எந்தவிதத்திலும் தாமதித்து விடக் கூடாது.

பெருந்தொற்றை கண்டறியும் முறையை உருவாக்குவது
பெருந்தொற்றை கண்டறியும் முறையை உருவாக்குவது, தடுப்பூசிகள், சிகிச்சை முறை ஆகியவற்றை நாம் தயாராக வைத்திருந்தால், கொரோனா தொற்றையே கூட நாம் தடுத்திருக்கலாம். இவற்றை எம்மால் உருவாக்கிவிட முடியும் என்றாலும் சர்வதேச ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.

2021ஜி 7 மாநாட்டில், கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில், அடுத்த பெருந்தொற்றை தடுக்க அனைவரும் ஒத்துழைப்போம் என்று உறுதிபூண்டு கொண்டனர். ஆனால் , தற்போது இதனை அனைவரும் மறந்துவிட்டனர்.

பொதுவாக, ஒரு நாட்டை பொறுத்தவரை இராணுவம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இராணுவம் என்பது எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதற்காக ஆண்டு முழுக்க போர் உண்டாக போகிறது என்ற அர்த்தம் இல்லை.

அலட்சியமாக விட்டுவிட்டால் அது மிகப்பெரிய பேரழிவை
இதே போலதான் பெருந்தொற்று காலத்திலும், அது இல்லாத காலத்திலும் என எப்போதும் அதை எதிர்க்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு தொற்று காலத்தில் மட்டும் தொற்றுக்கான அதிகம் கவனம் செலுத்திவிட்டு, மற்ற காலங்களில் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்று நடவடிக்கை எடுக்காமல் இருக்கக்கூடாது. அப்படி அலட்சியமாக விட்டுவிட்டால் அது மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும்.

ஆகவே, பெருந்தொற்று தொடர்பாக, அதை எப்படி கையாள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை கொண்டு வர வேண்டும். இந்த ஒப்பந்தம்,தொற்றுநோய் ஏற்படும் காலங்களில் உலக நாடுகள் அதை எதிர்க்கொள்ள தயார் நிலையில் இருக்கின்றன என்பதை முன்மொழியும் ஒப்பந்தமாக இருக்க வேண்டும்.

இந்த விவகாரத்தை பொறுத்தவரை போதிய கவனத்தை நாடுகள் செலுத்துவதாக தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.