சிறிய நாடு ஒன்றுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்த அமெரிக்கா: பின்னணியில் இருக்கும் காரணம்
தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடான மால்டோவாவிற்கு அமெரிக்கா (America) 135 மில்லியன் டொலர்களை அள்ளி கொடுத்துள்ளது.
கிழக்கு ஐரோப்பியப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடான மால்டோவாவின் (Moldova) மொத்த பரப்பளவு 33,846 சதுர கிலோமீட்டர் என்பதுடன் வெறும் 25 லட்சம் மக்களே அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்கா, அந்த சிறிய நாட்டிற்கு சுமார் 35 மில்லியன் டொலர்களை அள்ளிக்கொடுத்துள்ளது.
135 மில்லியன் டொலர்
அத்துடன், ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் (Antony Blinken), எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும் போலி தகவல்களை எதிர்த்துப் போராடவும் மால்டோவாவிற்கு அமெரிக்கா 135 மில்லியன் டொலர்களை வழங்கும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஆண்டனி பிளிங்கன் மால்டோவாவின் தலைநகரான சிசினாவுக்கு சென்றிருந்த நிலையில், அமெரிக்கா வழங்கவுள்ள நிதி தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச அரசியல் காரணம்
இதன்போது, அவர் ரிசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்த 85 மில்லியன் டாலர் அளிக்கப்படும் நிலையில், எனர்ஜி மற்றும் விவசாய துறை மறுசீரமைப்பதற்கும், இணையத்தில் பரவும் போலி தகவல்களைத் தடுப்பதற்கும் $50 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த பணத்தை வழங்கியதன் பின்னணியில் சர்வதேச அரசியல் காரணங்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, உக்ரைன் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து ரஷ்யா மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் தலையிடலாம் எனக் கூறப்படும் நிலையில், ரஷ்ய ஆதிக்கத்தைத் தடுக்கவே அமெரிக்கா இந்த சிறிய நாட்டுக்கு இவ்வளவு பெரிய தொகையை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைன் போர்
அத்துடன், உக்ரைன் போர் ஆரம்பமாகியதில் இருந்தே அமெரிக்கா மால்டோவாவிற்கு தொடர்ந்து நிதியுதவிகளை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2022 பெப்ரவரி மாதத்திலிருந்து இதுவரை சுமார் 774 மில்லியன் டொலர்களை வழங்கி அமெரிக்கா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.