;
Athirady Tamil News

ராட்சத பலூன்களை அனுப்பி தென்கொரியாவை அச்சுறுத்தியுள்ள வடகொரியா

0

ஏராளமான ராட்சத பலூன்களை தனது எல்லைக்குள் அனுப்பி வைத்துள்ளதாக தென்கொரியா வடகொரியா மீது குற்றம் சுமத்தியுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா(North Korea) அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை(South Korea) அச்சுறுத்தி வருவது வழக்கமான விடயமாகும்.

அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை மேற்கொள்ளும்போது, இவ்வாறு ஏவுகணைகளை செலுத்தி தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும்.

தென் கொரியா கண்டனம்
இந்நிலையில்,தற்போது ஏராளமான ராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்துள்ளது. அதில், இரண்டு பலூன்களை ஒன்றாக இணைத்து அதில் குப்பைகளை கட்டி அனுப்பி வைத்துள்ளது.

இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ள தென்கொரிய பகுதிகளுக்குள் ஏராளமான பலூன்கள் இவ்வாறு பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பறந்து வந்த பலூன்களில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில், பேட்டரிகள், ஷூ பகுதிகள், சாணம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ராட்சத பலூன்கள்
வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும்,தென்கொரிய மக்களுக்கு எதிரான அச்சுறுத்தலாக பார்க்கப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே, இவ்வாறான செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தென்கொரியா கடுமையாக எச்சரித்துள்ளது. எல்லை அருகில் அமைந்துள்ள ஜியோங்க்கி, கங்வோன் மாகாணத்தில் உள்ள மக்களுக்கு அடையாளம் தெரியாத பொருட்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், தற்போது தரையிறங்கியுள்ள பலூன்களால் சேதம் ஏதும் ஏற்பட்டது குறித்து தென்கொரியா தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.