;
Athirady Tamil News

பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

0

யாழ்ப்பாணம் – பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா முன்னிட்டு கொடியேற்றல் நிகழ்வு நாளை(01) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும்.

அதனைத் தொடர்ந்து 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நவநாள் வழிபாடுகள் ஆரம்பமாகும். நவநாள் வழிபாடுகள் தினமும் மாலை 5.30மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும்.
நற்கருணைப் பெருவிழா 12 ஆம் திகதி புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறும்.

புனிதரின் திருவிழா திருப்பலி 13 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் திருப்பலி அதிகாலை 5.15 மணிக்கும், திருவிழா திருப்பலி காலை 6.30 மணிக்கும் இடம்பெறும்.

திருச்சுரூப தேர்பவனி அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு இடம்பெறும் என ஆலய பங்குத்தந்தை அருட்பணி எம்.ஜெறோ செல்வநாயகம் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.