;
Athirady Tamil News

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 7 ரயில்கள்.. எங்கு தெரியுமா?

0

இந்தியாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு நேரடியாக செல்ல 7 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

ஹல்திபாரி: மேற்கு வங்கத்தில் உள்ள நியூ ஜல்பாய்குடி ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 4.5 கி.மீ., தூரம் பயணித்தாலே வங்கதேசத்தை அடைந்துவிடலாம்.

ஜெய்நகர்: பீகார் மாநிலம் மதுபானியில் இருந்து நேபாளத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தியா – நேபாளத்திற்கு இடையே இயக்கப்படும் இந்த ரயில் மூலம் எளிதாக நேபாளத்திற்கு செல்லலாம். நேபாளத்திற்கு அடிக்கடி செல்லும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த ரயிலைத் தான் பயன்படுத்தி வருகின்றனர்.

பெட்ராபோல்: பெட்ராபோல் ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேசத்திற்கு இயக்கப்படுவதால், இரு நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி – இறக்குமதிக்கு இந்த ரயில் பயன்படுத்தப்படுகிறது.

சிங்காபாத்: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் இருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் ரோகன்பூர் வழியாக வங்கதேசத்திற்கு பயணிக்கிறது.

சோக்பானி: பீகார் மாவட்டத்தில் உள்ள சோக்பானி ரயில் நிலையத்தில் இருந்து நேபாளத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நேபாளத்திற்கு மிக அருகில் இந்த ரயில் நிலையம் இருப்பதால், நேபாளத்திற்கு ரயிலில் கூட செல்லத் தேவையில்லை. நடந்தே கூட சென்றுவிடலாம்.

ராதிகாபூர்: மேற்கு வங்க மாநிலம் ராதிகாபூர் ரயில் நிலையம், ஜீரோ பாயிண்ட் ரயில் நிலையம் என்று அழைக்கப்படுகிறது. சரக்கு போக்குவரத்திற்காக, இங்கிருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அட்டாரி: பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் மிகவும் பிரபலமான ரயில் நிலையம் என்றால், அட்டாரி ரயில் நிலையம். இது வடக்கு ரயில்வேயின் கடைசி ரயில் நிலையம். இந்த வழியாக பாகிஸ்தானுக்கு சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் வாரத்தில் 2 நாட்கள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.