;
Athirady Tamil News

பாகிஸ்தானுக்கு ஆயிரக்கணக்கான கருவிழிப்படலங்களை வழங்கிய இலங்கை

0

பாகிஸ்தானுக்கு (Pakistan) 36,000 கருவிழிப்படலங்களை இலங்கை (Sri Lanka) நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதனை பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன (Admiral Ravindra Wijegunaratne) தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை உலகிற்கு 88,000 கருவிழிப்படலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருவிழிப்படலம்
அவற்றில் பாகிஸ்தானுக்கே அதிகளவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுச்சூழலிலிருந்து ஒட்சிசனை எடுத்துக் கொள்ளும் “கார்னியா“ (corneas) எனப்படும் கருவிழிப்படலம், இரத்தமில்லாத திசுவால் ஆனதாகும்.

இதனை, தானமாக கொடுப்பவருக்கோ, அதனைப் பெற்றுக் கொள்பவருக்கோ, மருத்துவ ரீதியாக எந்தவொரு பொருத்தமும் வேண்டியதில்லை.

அவை இயல்பாகவே எவருக்கும் ஏற்புடையதாகிவிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.