ஆளுங்கட்சியில் முக்கிய அமைச்சு பதவி: சவால் விடும் விமல் வீரவன்ச
நாட்டின் தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள தன்னால் முடியுமென முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் (National Freedom Front) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச (Wimal Weeravansa) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்துடன் இணைந்து கொண்டால் முக்கியமான அமைச்சுப் பதவியைக் கூட பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகளும் அழைப்பு
இதேவேளை, தங்களுடன் இணைந்து பயணிக்குமாறு எதிர்க்கட்சிகளும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில், எல்லோரும் ஒரே சித்தாந்தத்தை தான் கடைபிடிக்கிறார்களே தவிர அரசியல் இலாபத்திற்காக தனது சித்தாந்தங்களை மாற்றத் தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.