கிளிநொச்சியில் சுற்றாடல் முன்னோடிக் கழக மாணவர்களால் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு
ஜூன் 5ம் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
மே 30ம் திகதி தொடக்கம் ஜூன் 5ம் திகதி வரையான ஒரு வார கால பகுதியை சுற்றுச்சூழலைப் காப்பதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஏற்பாட்டில் (31.05.2024) கிளிநொச்சி மத்திய கல்லூரியில் சுற்றாடல் முன்னோடிக் கழக மாணவர்களால் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் வடமாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் மகேஷ் ஜல்தோட்ட, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், வனவள திணைக்கள உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் திருவையாறு மகா வித்தியாலய சுற்றாடல் முன்னோடிக் கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.