;
Athirady Tamil News

6 கடற்றொழிலார்களுடன் மாயமான மீன்பிடி படகு மீட்பு

0

வென்னப்புவ மீன்பிடி துறைமுகத்திலிருந்து 6 பேரை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி கப்பல் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் வெளிநாட்டு கப்பல் ஒன்றின் மூலம் நேற்று (31) மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கொழும்பிலுள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் பேரில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கடற்படைத் தெரிவித்துள்ளது.

கடற்படைத் தலைமையகம்
கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி வென்னப்புவ மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக “Ragini Meri” என்ற பல நாள் மீன்பிடி கப்பல் புறப்பட்டது.

கப்பல் ஆபத்தில் சிக்கியுள்ளதாகவும், கப்பலை மீட்பதற்கு கடற்படையின் உதவியை வழங்குமாறும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு அறிவித்துள்ளது.

அதன்படி, ஜப்பான் கொடியுடன் பயணித்த ‘MT TONEGAWA’ என்ற வணிகக் கப்பலில் இருந்த 6 கடற்றொழிலார்கள் மீட்கப்பட்டதாகவும், அந்த கடற்றொழிலார்கள் கடற்படையினரால் சிறிலங்காவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.