டொனால்டு ட்ரம்ப்க்கு வாழும் நாஸ்ட்ராட்ராமஸால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின்(Donald Trump) எதிர்காலம் பற்றி வாழும் நாஸ்ட்ராட்ராமஸ், குறிப்பிட்டுள்ளதோடு அவரை எச்சரித்தும் உள்ளார்.
அதாவது, டொனால்டு ட்ரம்பின் எதிர்காலம் கணிக்க முடியாத வகையில் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமெரிக்க அதிபரான,டொனால்டு ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட வழக்கு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளார்.
சிறை செல்லவிருக்கும் டொனால்டு ட்ரம்ப்
2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைப்பதற்கு நடிகை ஒருவருக்கு 1.3 இலட்சம் டொலா் (சுமாா் ரூ.109 கோடி) வழங்கியதாக டிரம்ப் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பில் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நீதிபதி அறிவித்த நிலையில் ஜூலை 11ஆம் திகதி டிரம்ப்பிற்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாழும் நாஸ்ட்ராட்ராமஸ் என அறியப்படும் பிரேசில் நாட்டவரான Athos Salomé ட்ரம்பின் உடல் நலம் தொடர்பில் எச்சரித்துள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தடுக்க நுரையீரல் ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டும் என்று ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல்முறையீடு வாய்ப்புகள் இருப்பதால், அதில் வெற்றிபெற்று சிறை தண்டனையில் இருந்து அவர் தப்பலாம் என்றும் அரசியலில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாகவும், 2026 டொனால்டு ட்ரம்புக்கு முக்கியமான ஆண்டு என்றும் Athos Salomé கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.