;
Athirady Tamil News

2024 ஜூன் மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்

0

பிரான்சில் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்று, அதாவது, ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல், சில குடும்பங்கள், உடற்குறைபாடு கொண்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு, பிரான்ஸ் அரசு Pass’Sport என அழைக்கப்படும், நபர் ஒருவருக்கு 50 யூரோக்கள் உதவித்தொகையை வழங்க உள்ளது. பிள்ளைகள் விளையாட்டு அமைப்பு ஒன்றில் இணைவதற்கு உதவியாக இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

சிகரெட் விலை உயர்வு
ஜூன் 1ஆம் திகதி முதல், புகையிலை தயாரிப்புகளின் விலைகள் உயர இருக்கின்றன.

மருந்தகங்கள் மற்றும் மூக்குக்கண்ணாடி தயார்ப்பாளர்களுக்கு கூடுதல் அதிகாரம்
ஜூன் 1 முதல், பிரான்சிலுள்ள அனைத்து மருந்தாளுநர்களுக்கும் (pharmacists) தொண்டை அழற்சி (tonsillitis or strep throat) மற்றும் சிறுநீர்ப்பாதைத் தொற்று ஆகிய உடல் நல குறைபாடுகளுக்கு மருந்துகள் பரிந்துரைக்க அதிகாரம் வழங்கப்படுகிறது.

அதேபோல, மூக்குக்கண்ணாடி தயார்ப்பாளர்களுக்கும், பரிந்துரைச் சீட்டில் சில மாற்றங்கள் செய்ய அதிகாரம் வழங்கப்படுகிறது.

வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்
பிரான்சில் 55 முதல் 96 வரையிலான départementகளில் வாழ்வோருக்கு வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள், ஜூன் மாதம் 6ஆம் திகதி, நள்ளிரவு 11.59 மணி என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துவரி தாக்கல்
பிரான்சில் சொத்து வைத்திருப்போர் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்குள் the déclaration d’occupation என்னும் ஆவணத்தை சமர்ப்பித்திருக்கவேண்டும்.

எரிவாயு கட்டணம் உயர்வு
இன்று முதல், எரிவாயு விலை, ஒரு megawatt hour (MWh)க்கு 1.8 சதவிகிதம், அல்லது, 111.19 யூரோக்களிலிருந்து 113.19 யூரோக்களாக உயர இருக்கிறது.

ஐரோப்பிய தேர்தல்கள்
மைய பிரான்ஸ் மற்றும் கடல் கடந்த பிரதேசங்களான Réunion, Mayotte, Nouvelle-Calédonie and Wallis மற்றும் Futuna ஆகிய இடங்களில், அடுத்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது ஜூன் மாதம் 9ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் மாதம் 26ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 23ஆம் திகதி வரை summer sales நடைபெற உள்ளது. பிரான்ஸ் கடல் கடந்த பிரதேசங்கள் மற்றும் Corsicaவில் summer sales ஜூலை 10ஆம் திகதிதான் துவங்க உள்ளது.

ஈபிள் கோபுர டிக்கெட் விலையில் மாற்றம்
ஈபிள் கோபுர டிக்கெட் விலையில் மாற்றம் செய்ய பாரீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள். அவசர பராமரிப்புப் பணிகளுக்கான செலவுக்காக, பெரியவர்களுக்கான நுழைவுக்கட்டணம் 20 சதவிகிதம் உயர இருக்கிறது. ஆகவே, ஜூன் மாதம் 17ஆம் திகதி முதல் ஈபிள் கோபுர டிக்கெட் விலை 35.30 யூரோக்களாக உயர இருக்கிறது. அந்த டிக்கெட்டின் தற்போதைய விலை 29.40 யூரோக்கள் ஆகும்.

பிரஸ்ஸல்ஸ் செல்லும் ஜனாதிபதி மேக்ரான்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ஐரோப்பிய கவுன்சிலில் பங்கேற்பதற்காக ஜூன் அதாவது இம்மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் பிரஸ்ஸல்ஸ் செல்ல இருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.