;
Athirady Tamil News

Schengen Visa… கட்டணம் தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்: ஐரோப்பிய ஆணைக்குழு ஒப்புதல்

0

மொத்த ஐரோப்பிய நாடுகளுக்குமான Schengen Visa கட்டணம் தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

90 நாட்கள் செல்லுபடியாகும்
ஜூன் மாதம் 11ம் திகதி முதல் இனி பெரியவர்களுக்கான Schengen Visa கட்டணம் 80ல் இருந்து 90 யூரோ என அதிகரிக்கும். சிறார்களுக்கு 40ல் இருந்து 45 யூரோ என கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த மாற்றமானது தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களுக்கு பொருந்தும். 90 நாட்கள் செல்லுபடியாகும் இந்த விசாவானது 28 ஐரோப்பிய நாடுகளுக்கும் பொதுவானதாகும்.

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு Schengen Visa கட்டணத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளனர். பொதுவாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை Schengen Visa கட்டணத்தில் மாற்றம் கொண்டுவருவது வாடிக்கையான ஒன்று.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைக்காத நாடுகளின் பயணிகளுக்கான Schengen Visa கட்டணமனது 135 யூரோ வரையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றே கூறப்படுகிறது.

6 மில்லியன் மக்களுக்கு குடியுரிமை
பிரித்தானியாவை பொறுத்தமட்டில் புலம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகளை செயல்படுத்தும் முடிவுக்கு அந்த நாடு வந்துள்ளது.

ஆனால் அவுஸ்திரேலியா புலம்பெயர் மக்களை வரவேற்று 75 ஆண்டுகள் நிறைவை கொண்டாடுகிறது. 1949 முதல் 200 நாடுகளை சேர்ந்த 6 மில்லியன் மக்களுக்கு அவுஸ்திரேலியா குடியுரிமை வழங்கியுள்ளது.

மட்டுமின்றி அகதிகள் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா அரசாங்கம் அதிகரித்துள்ளது. இதனிடையே ஜப்பான் அரசாங்கம் புதிதாக Digital Nomad Visa ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

ஒரு குறிப்பிட்ட வருமானம் ஈட்டும் தகுதியுள்ள நபர்களுக்கு ஆறு மாதங்களுக்கான விசாக்களை வழங்க முடிவு செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.