மத்திய வங்கி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் கையளிக்கப்பட்ட அறிக்கை
மத்திய வங்கி பணியாளர்களுக்கு முன்மொழியப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்ட, 70 சதவீத சம்பள உயர்வு அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சுயாதீன சம்பளக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் முன்னைய சதவீத நிலைக்கு சம்பள உயர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 2021ஆம் ஆண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டில் நடைமுறையில் இருந்த 27.49 சதவீதத்துக்கு இந்த சம்பள உயர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கூட்டு ஒப்பந்தங்கள்
முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு தொடர்பான ஆழமான பரிசீலனையைத் தொடர்ந்து இந்தக் குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) தமது அறிக்கையை கையளித்துள்ளது.
மூன்று வருடங்களுக்கு ஒருமுறை முன்மொழியப்படும் சம்பள திருத்தம் இறுதியாக முன்மொழியப்பட்டபோது நாட்டின் நலன் கருத்திற்கொள்ளப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
1991ஆம் ஆண்டு முதல், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய வங்கியால் இத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், 2000ஆம் ஆண்டிலிருந்து இத்தகைய திருத்தங்களுக்கு கூட்டு ஒப்பந்தங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.