பல்வேறு குற்றச் செயல்கள் : கனடாவில் தேடப்பட்டவர் பிடிபட்டார்
கனடாவில் தேடப்படுவோர் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
21 வயதான ஹபிடொன் சொலோமொன் என்ற நபரே கைது செய்யப்பட்டவராவார்.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்பு
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர் எனவும் இதனால் அவர் தேடப்படுவோர் பட்டியலில் இணைக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
கடந்த வருடம் 18 வயதான நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹமில்டனில் வைத்து குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.