வெறுக்கத்தக்க குற்றச்சாட்டு… ஸ்வீடன் தூதுவரை விளக்கம் கேட்க நேரில் அழைத்த ஈரான்
இஸ்ரேல் மற்றும் எதிரி நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் பொருட்டு ஈரான் ஒரு குற்றவியல் குழுவினை ஸ்வீடனில் இருந்து இயக்குவதாக அந்த நாட்டின் உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளது.
ஸ்வீடன் தூதுவரை நேரில் அழைத்து
இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்கும் பொருட்டு ஸ்வீடன் தூதுவரை நேரில் அழைத்துள்ளது ஈரான். ஸ்வீடனில் அமைந்துள்ள ஈரானிய தூதரகம் ஏற்கனவே இந்த விவகாரத்தில் உண்மை இல்லை என மறுத்துள்ளது.
ஸ்வீடனில் உள்ள குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களைப் பயன்படுத்தி ஈரான் மற்ற நாடுகளுக்கு எதிராக வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாக ஸ்வீடனின் புலனாய்வு அமைப்பு முந்தைய நாள் கூறியிருந்தது.
மட்டுமின்றி, இந்த குழுக்கள் இஸ்ரேலியர்கள் மற்றும் குறிப்பாக யூதர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தது. மட்டுமின்றி, இரண்டு ஸ்வீடிஷ் குழுக்களின் தலைவர்கள் ஈரானிய அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பு கூறியதாக ஸ்வீடனில் உள்ள நாளேடு ஒன்றி வெளிப்படுத்தியிருந்தது.
மேலும், ஈரான் தனது ஆட்சிக்கு எதிரான விமர்சனக் குரல்கள் மற்றும் உணரப்பட்ட அச்சுறுத்தல்களை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஐரோப்பாவின் பிற நாடுகளில் வன்முறையைப் பயன்படுத்தியது என்றும் ஸ்வீடன் வெளிப்படுத்தியிருந்தது.