இஸ்ரேல் ஆதரவினரே வெளியேறு! பிரித்தானியாவுக்காக வேலை பாருங்கள்..லேபர் கட்சிக்கு எதிரான வாசகம்
வடகிழக்கு லண்டனில் உள்ள லேபர் கட்சி அலுவலகத்தின் மீது எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
லேபர் கட்சி
பிரித்தானியாவில் ஃபைஸா ஷாஹீன் 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடகிழக்கு லண்டன் தொகுதியில் லேபர் கட்சியின் வேட்பாளராக இருந்தார்.
ஆனால், அவர் மீண்டும் கட்சிக்கு போட்டியிட விடாமல் லேபர் அதிகாரிகளால் வியத்தகு முறையில் தடுக்கப்பட்டார். தனது பாலஸ்தீன சார்பு கருத்துக்கள் தன்னை வெளியேற்றியதாக ஃபைஸா ஷாஹீன் இந்த வாரம் கூறினார்.
இந்த நிலையில் வடகிழக்கு லண்டனில் உள்ள லேபர் கட்சி அலுவலக சன்னல்களில், ”இஸ்ரேல் ஆதரவினரே வெளியேறு; நாட்டுக்காக வேலை பாருங்கள். பிரித்தானிய அமைச்சர்கள் பிரித்தானியாவுக்காக வேலை செய்கிறார்கள், இஸ்ரேலுக்காக அல்ல” என்ற வாசகங்கள் Graffiti மூலம் எழுதப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெட்கக்கேடானது
இதனை எழுதியவர்களை தேடும் பணியில் Met பொலிஸார் தற்போது ஈடுபட்டுள்ளனர். ஷாஹீனுக்கு பதிலாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரான ஷாமா டாட்லர், இந்த Graffitiஐ ”வெட்கக்கேடானது” என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர், ‘இந்த வெட்கக்கேடான நாசவேலை எங்கள் பிரச்சாரத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல – இது எங்கள் முழு சமூகத்தின் மீதான தாக்குதல்’ என்று தெரிவித்துள்ளார்.