;
Athirady Tamil News

ரிஷி சுனக் இரவு எப்படி நிம்மதியாக தூங்குகிறார்… அவரது பழைய கால ஆசிரியர் வெளிப்படை

0

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் முன்னாள் ஆசிரியர் ஒருவர் தாம் இந்த முறை லேபர் கட்சிக்கு வாக்களிக்க இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய மக்களுக்கு துரோகம்
பிரெக்சிட் விவகாரத்தில் பிரித்தானிய மக்களுக்கு துரோகம் இழைத்ததற்காக பிரதமர் ரிஷி சுனக்கை தண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள Nick MacKinnon, இந்த முறை தாம் கண்டிப்பாக லேபர் கட்சிக்கு வாக்களிக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Winchester கல்லூரியில் கணிதவியல் ஆசிரியரான Nick MacKinnon, ரிஷி சுனக் நல்ல மாணவன் என்றும் தெரிவித்துள்ளார். 44 வயதாகும் பிரதமர் ரிஷி சுனக் இரவு எப்படி நிம்மதியாக தூங்குகிறார் என்பது தமக்கு புரியவில்லை என்றும்,

பிரித்தானியாவின் பொதுத்துறை நிறுவனங்களை தெரிந்தே சேதப்படுத்தியவர் அவர் என்றும் Nick MacKinnon குறிப்பிட்டுள்ளார். இளையோர்களுக்கு ராணுவ சேவை என்ற ரிஷி சுனக்கின் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள Nick MacKinnon, முதியவர்களின் வாக்குகளை கவர மட்டுமே இந்த திட்டம் பயன்படும் என்றார்.

முழுமையான அவசரவாதியாக ரிஷி சுனக்
642 ஆண்டுகள் பழமையான கல்விக்கூடம் ஒன்றில் பணியாற்றிவரும் Nick MacKinnon, ரிஷி சுனக்கின் அரசியலை உற்று கவனித்தும் வருகிறார். மேலும், இதே கல்வி நிலையத்திற்கு 1986 முதல் 2020 வரையில் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவியும் இணைந்து சுமார் 100,000 பவுண்டுகள் நன்கொடை அளித்துள்ளனர்.
ரிஷி சுனக் தொடர்பில் பெருமையாக பேசியுள்ள Nick MacKinnon, அவர் ஒரு நல்ல மாணவர், அவர் பள்ளியின் தலைவராக இருந்தார் மற்றும் 600 ஆண்டுகளில் முதல் வெள்ளையர் அல்லாத பள்ளித் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால் தற்போது அவரது முடிவுகளில் தமக்கு உடன்பாடில்லை என்றும், ஒரு முழுமையான அவசரவாதியாக ரிஷி சுனக் மாறிவிட்டார் என்றும் Nick MacKinnon தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.