;
Athirady Tamil News

சிறை தண்டனையை எதிர்நோக்கும் ட்ரம்ப்… தடை விதிக்கவிருக்கும் 37 நாடுகள்

0

தனிப்பட்ட ஆதாயங்களுக்காக முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அவர் உலகின் 37 நாடுகளில் நுழைய முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

4 ஆண்டுகள் வரையில் சிறை
ஆபாச பட நடிகையுடன் உல்லாசம் அனுபவித்த விவகாரத்தை மூடி மறைக்க 130,000 டொலர் தொகையை அந்த நடிகைக்கு அளித்துள்ளதுடன், அந்த தொகைக்கு போலியான ஆதாரங்களை உருவாக்கிய வழக்கில் டிரம்ப் குற்றவாளி என மன்ஹாட்டன் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அவருக்கான தண்டனை விவரம் மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் ட்ரம்புக்கு 4 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அமெரிக்க சட்ட விதிகளின் அடிப்படையில், ட்ரம்பால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும். இருப்பினும் அவருக்கான சில உரிமைகள் மறுக்கப்படும். இதனால் தமது பதவியை முழுமையாக நிர்வகிப்பது சிக்கல் என்றே கூறுகின்றனர்.

அதில், குற்றப்பின்னணி கொண்ட தனிப்பட்ட நபர்களை கடுமையான விதிகளை பின்பற்றும் சில நாடுகள் அனுமதிப்பதில்லை. ஆனால் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், பல நாடுகளின் நிர்வாகம் அவருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கலாம்.

விதிகள் மாறுபடும்
இருப்பினும் பிரித்தானியா, சீனா, ஜப்பான், அவுஸ்திரேலியா, தெற்கு ஆப்பிரிக்கா, கனடா உள்ளிட்ட 37 நாடுகள் தங்கள் எல்லையை கடக்க டொனால்டு ட்ரம்பை அனுமதிப்பதில்லை என்றே கூறப்படுகிறது.

பிரித்தானியாவை பொறுத்தமட்டில் குறைந்தது 12 மாதங்கள் சிறை தண்டனை பெற்றுள்ள, குற்றப் பின்னணி கொண்ட நபரை தங்கள் நாட்டில் அனுமதிப்பதில்லை. அந்த நபரால் தங்கள் நாட்டுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை அதிகாரிகள் விவாதித்து முடிவெடுப்பார்கள்.

அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திலும் விதிகள் மாறுபடும். நியூயார்க்கில் ட்ரம்ப் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கே அவர் தேர்தலில் போட்டியிடவோ பதவிக்கு வரவோ வாய்ப்பில்லை.

தற்போது புளோரிடாவில் ட்ரம்ப் வசித்து வருகிறார். அங்கேயும் இதே விதிகள் என்றே கூறப்படுகிறது. இருப்பினும் அவர் ஜனாதிபதியாக போட்டியிடுவதில் சிக்கல் இல்லை என்றே கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.