வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாகவும் போராட்டம்
வட மாகாண அரச சாரதிகள் சங்கம் வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாணத்தில் 5வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளுக்கான இடமாற்றத்திற்கு பிரதிப் பிரதம செயலரால், கடந்த வருடம் விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.
ஆளுநரின் கோரிக்கை அமைய பின்னர் அந்த இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரச சாரதிகள் சங்கம் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அறிவித்த நிலையில், காலையில் ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அரச சாரதிகள் சங்கம், ஆளுநருக்கான மகஜரை அவரின் பிரதிநிதியிடம் கையளித்தனர்.
அதனைத் தொடர்ந்து கைதடியில் அமைந்துள்ள பிரதமர் செயலர் அலுவலகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.