மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக பதவியேற்கும் கிளாடியா ஷின்பாம்
மெக்சிகோ (Mexico) நாட்டின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷின்பாம் (Claudia Sheinbaum) பதவியேற்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்சிகோவில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று (02) நடைபெற்றது.
இதில் இடதுசாரி கட்சியான மொரேனா கட்சி சார்பில் போட்டியிட்ட கிளாடியா ஷின்பாம் அமோக வெற்றி பெற்று நாட்டின் முதல் பெண் அதிபராக பதவியேற்க உள்ளார்.
முதல் பெண் அதிபர்
இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு 58.3 வீதம் முதல் 60.7 வீதமான வாக்குகளும், எதிர்க்கட்சி வேட்பாளரான Xochitl Galvez என்பவருக்கு 26.6 வீதம் முதல் 28.6 வீதமான வாக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.
கிளாடியா ஷின்பாம் தனது வெற்றி உரையில் “நான் மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபர் ஆகிறேன். இது எனது வெற்றி மட்டுமல்ல. நம் அனைவருடைய வெற்றியாகும். தாய்மார்களுக்கான வெற்றி. இதன் மூலம் மெக்சிகோ ஜனநாயக நாடு என்பதை நாம் நிரூபித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை 61 வயதான கிளாடியா ஷின்பாம் எதிர்வரும் டிசம்பர் மாதம் அதிபராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.