;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தில் மாயமான பிரித்தானிய பிரபலம்: ஏரியில் சடலமாக மீட்கப்பட்டதால் சோகம்

0

பிரித்தானியர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் மாயமான நிலையில், இரண்டு வாரங்களுக்குப் பின் அவரது உயிரற்ற உடல் மீட்கப்பட்டுள்ள விடயம் சோகத்தை உருவாக்கியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் மாயமான பிரித்தானிய பிரபலம்
Kayak என்னும் சிறுபடகைச் செலுத்தும் விளையாட்டில் சாதனை படைத்தவர் பிரித்தானியரான Bren Orton (29). மே மாதம் 16ஆம் திகதி, Melezza நதியில் படகைச் செலுத்திக்கொண்டிருக்கும்போது மாயமானார் Bren.

இந்த தகவல் கிடைத்ததும், பிரித்தானியாவிலிருந்து 15 பேர், Brenஐப் போலவே சிறுபடகு செலுத்தும் போட்டியில் ஈடுபடுபவர்கள், சுவிட்சர்லாந்துக்கு விரைந்துள்ளார்கள். அவர்களும், அமெரிக்கர்கள் சிலரும் தேடியும் Brenஐக் கண்டுபிடிக்கமுடியவில்லை.

ஏரியில் கண்டெடுக்கப்பட்ட உடல்
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று, Maggiore ஏரியில் படகில் சென்றுகொண்டிருந்த ஒருவர், உயிரற்ற உடல் ஒன்று மிதப்பதைக் கண்டு உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

அந்த உடல், Melezza நதியில் மாயமான Brenஉடைய உடல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. Brenஐப்போலவே Kayak படகு செலுத்தும் போட்டியில் ஈடுபடும் அவரது சக வீரர்களும், அவரது முன்னாள் பயிற்சியாளர் ஒருவரும், Bren ஒரு நல்ல மனிதர் என்றும், அவரது இழப்பு ஈடு செய்யமுடியாதது என்றும் கூறியுள்ளதுடன் அவருக்கு இரங்கலையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள்.

Bren, 2018ஆம் ஆண்டு, மெக்சிகோவிலுள்ள Big Banana Falls என்னும் நீர்வீழ்ச்சியிலிருந்து 128 அடி ஆழத்தில் படகைச் செலுத்தி, மிக உயரமான நீர்வீழ்ச்சியிலிருந்து கீழ் நோக்கி படகைச் செலுத்தியவர் என்னும் பிரித்தானிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.