பிரித்தானிய பிரதமருக்கு பேரிடி: பொதுதேர்தலில் களமிறங்கும் நைஜல் ஃபரேஜ்
பிரித்தானிய (BritaIn) பொதுத்தேர்தலில் மிகவும் திறமையான சொற்பொழிவாளர் மற்றும் ஆர்வலர்களில் ஒருவராகக் கருதப்படும் நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த விடயமானது, அந்நாட்டு பிரதமர் ரிசி சுனக்கின் (Rishi Sunak) கட்சிக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய அரசியல்
அதன்படி நைஜல் ஃபரேஜ், ஜூலை 4-ம் திகதி பிரித்தானிய பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
பிரெக்சிட்டின் “கட்டமைப்பாளரும்” மற்றும் பிரித்தானிய அரசியலில் நிரந்தர சீர்குலைக்கும் சக்தியுமான நைஜல் ஃபரேஜ், தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள கிளாக்டனில் உள்ள யூரோஸ்கெப்டிக் தொகுதியில் Reform UK கட்சியின் வேட்பாளராக நிற்கும் தனது விருப்பத்தை அறிவித்துள்ளார்.
பாரிய மாற்றம்
எவ்வாறாயினும், இதற்கு முன்னதாக ஏழு முறை போட்டியிட்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவிட்டாலும் பொதுத் தேர்தலில் இவர் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தற்போதைய ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி நீண்ட கால வாக்காளர்களை இழக்க நேரிடும் என கூறப்படுகிறது.