;
Athirady Tamil News

மேலும் நான்கு இஸ்ரேலிய பிணைக் கைதிகளைக் கொன்ற ஹமாஸ்

0

ஹமாஸால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட மேலும் நான்கு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

அக்டோபர் 7-ஆம் திகதி ஹமாஸால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட மேலும் 4 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதை இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியது.

ஹமாஸ் பணயக் கைதிகளான Nadav Popplewell, Amiram Cooper, Yoram Metzger மற்றும் Haim Peri ஆகியோர் உயிருடன் இல்லை என்றும், அவர்களது உடல்கள் ஹமாஸிடம் இருப்பதாகவும் அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் Daniel Hagari தெரிவித்தார்.

பணயக்கைதிகளை சரியான நேரத்தில் மீட்க முடியாமல் போனதற்காக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் IDF செய்தி தொடர்பாளர் மன்னிப்பு கேட்டார்.

மேலும், அக்டோபர் 7-ஆம் திகதி ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 35 வயதான துணை மருத்துவ ஊழியர் டோலெவ் யெஹுட் (Dolev Yehud) இறந்ததாகவும் ஹகாரி அறிவித்தார்.

டோலேவ் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற வெளியே சென்றதாகவும், அதனால் கொல்லப்பட்டதாகவும் ஹகாரி கூறினார்.

Dolev-க்கு ஒரு கர்ப்பிணி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

“உளவுத்துறையின் அடிப்படையில் நான்கு பணயக்கைதிகளும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக IDF கூறியது.

ஹமாஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த கான் யூனிஸ் பகுதியில் பல மாதங்களுக்கு முன்பு அவர்கள் நால்வரும் ஒன்றாகக் கொல்லப்பட்டதாக நாங்கள் மதிப்பிடுகிறோம்,” என்று ஹகாரி கூறினார்.

பணயக்கைதிகள் எப்படி இறந்தார்கள் என்று ஹகாரி கூறவில்லை. ஆனால் மார்ச் மாதம், அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு உபைதா, காசாவில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஏழு பணயக்கைதிகளில் பெர்ரி, மெட்ஜெர் மற்றும் கூப்பர் ஆகியோர் அடங்குவர் என்று அறிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.