;
Athirady Tamil News

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடாத்தப்பட்டு வருகின்ற யோகக்கலை

0

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடாத்தப்பட்டு வருகின்ற யோகக்கலைக் கற்கை நெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பின் வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் கடந்த (01.06.2024)சனிக்கிழமை காலை- 06.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.

சனி, ஞாயிறு தினங்களிலும், அரச விடுமுறை தினங்களிலும் காலை-06.00 மணிமுதல் காலை-08.00 மணி வரை நடைபெறும் இவ் வகுப்புக்களில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் இருபாலாரும் வயது வேறுபாடின்றிக் கலந்து கொள்ள முடியும்.

சுமார் மூன்று மாத காலங்களைக் கொண்டமைந்த இவ் அடிப்படைக் கற்கைநெறியைப் பூரணமாக முடிப்பவர்களுக்கு கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. பயிலவிரும்புவோர் நேரடியாக வந்து பதிவுகளை மேற்கொண்டு வகுப்பில் இணைந்து கொள்ளுமாறும் மேலதிக தகவல்களை 021 222 2203 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.