;
Athirady Tamil News

மத்தியஸ்த திறன்கள் மற்றும் உபாய மார்க்கங்கள் சம்பந்தமான 05 நாள் பயிற்சி நெறி- (video)

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்எருவில் பற்று (களுவாஞ்சிக்குடி) மத்தியஸ்த சபைகள் குழாத்திற்கு மத்தியஸ்தராக தெரிவு செய்வதற்கான சமரச திறக்கள் மற்றும் உபாய மார்க்கங்கள் சம்பந்தமான 05 நாள் பயிற்சி நெறி களுவாஞ்சிக்குடி சரஸ்வதி பாடசாலை மண்டபத்தில் திங்கட்கிழமை(3) ஆரம்பமானது.

குறித்த 05 நாள் பயிற்சி நெறியானது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் ஆலோசனைக்கமைய உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் பங்குபற்றலுடன் திங்கட்கிழமை (3) தொடக்கம் வெள்ளி (7) வரை நேரம் காலை 8.30 மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இரண்டாவது நாளான இன்று(4) குறித்த பயிற்சி நெறியில் பிரதான வளவாளர்களாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மத்தியஸ்த பயிற்றுநர் அதிகாரி எம்.ஐ.எம் ஆஸாத் வவுனியா மற்றும் மன்னார் மத்தியஸ்த பயிற்றுநர் அதிகாரி எஸ்.விமலராஜா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி நெறி தொடர்பில் விளக்கவுரைகளை வழங்கினர்.

இறுதியாக 05 நாட்களும் இப்பயிற்சி நெறியில் பங்கேற்றவர்கள் இறுதி நாளன்று நடைபெறுகின்ற பரீட்சையில் கலந்து கொள்வது கட்டாயமானதாகும் என அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மத்தியஸ்த பயிற்றுநர் அதிகாரி எம்.ஐ.எம் ஆஸாத் குறிப்பிட்டார்.

மேலும் ஏறாவூர் பிரதேச செயலகத்தின் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் அபிவிருத்தி உத்தியோகத்தரும் மட்டக்களப்பு மாவட்ட செயலக மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் பதில் அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.ஏ.எம் அஜுன், கல்முனை பிரதேச செயலகத்தின் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் அபிவிருத்தி உத்தியோகத்தரும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தின் பதில் அபிவிருத்தி உத்தியோகத்தருமான பாறுக் ஷிஹான், கல்முனை வடக்கு பிரதேச செயலக மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் க. அருள் பிரசாந்தன்,வெல்லாவெளி பிரதேச செயலக மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி லோஜினி விஜயநாதன்,ஆகியோரும் இப்பயிற்சி நெறியில் பங்கேற்று இருந்தனர்.

video link-https://wetransfer.com/downloads/6b9898f1025629b8bbb4ff61c3fab81020240604082831/7cd58d?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05

You might also like

Leave A Reply

Your email address will not be published.