;
Athirady Tamil News

தமிழகத்தில் தி.மு.க கூட்டணி முன்னிலை: முக்கிய வேட்பாளர்களின் தற்போதைய நிலை

0

புதிய இணைப்பு
தமிழகத்தில் (Tamil nadu) தி.மு.க. கூட்டணி 38 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி 2, பா.ஜ.க. கூட்டணி 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

வெளியான தேரிதல் முடிவுகளின் படி முக்கிய வேட்பாளர்கள் பலர் முன்னிலை பெற்றுள்ளனர், இன்னும் சிலர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

அந்தவகையில், தர்மபுரியில் பா.ம.கவின் – சௌமியா. நீலகிரியில் தி.மு.கவின் – ஆ.ராசா. குமரியில் பா.ஜ.கவின் – பொன்.ராதாகிருஷ்ணன். ஸ்ரீபெரும்புதூரில் – டிஆர் பாலு. மத்திய சென்னையில் தி.மு.கவின் – தயாநிதி.

பின்னடைவைச் சந்தித்துள்ளனர்

மற்றும், சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் – திருமாவளவன். தென் சென்னையில் – தமிழச்சி தங்கப்பாண்டியன். சேலத்தில் – டி.எம்.செல்வகணபதி. திருச்சியில் ம.தி.மு.கவின் – துரை வைகோ ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.

இதேவேளை, பா.ஜ., சார்பில் களமிறங்கிய கோவையில் – அண்ணாமலை, நீலகிரியில் – எல்.முருகன், தென் சென்னையில் – தமிழிசை சௌந்திரராஜன், நெல்லையில் – நயினார் நாகேந்திரன், இராமநாதபுரத்தில் சுயேச்சையாகக் களமிறங்கிய – பன்னீர்செல்வம், தேனியில் அ.ம.மு.கவின் – டிடிவி தினகரன் ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

இந்திய மக்களவை தேர்தலின் (Indian Lok Sabha Election) வாக்கெண்ணிக்கைக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ் நாடு மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளின் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதற்கமைய, தமிழ் நாட்டின் மொத்த 40 தேர்தல் தொகுதிகளில் 38 தேர்தல் தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க (D.M.K) கூட்டணி முன்னணி வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது்.

தி.மு.க கூட்டணி
இந்நிலையில், தி.மு.க கூட்டணியுடன் போட்டியிட்ட ஏனைய அதிமுக, பாஜக, நா.த.க (NTK) மற்றும் ஏனைய கட்சிகள் எந்த ஆசனங்களும் இன்றி தோல்வியை தழுவியுள்ளன.

குறிப்பாக, தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி 10 இடங்களில் அ.தி.மு.க.வை (AIADMK) பின்னுக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.