;
Athirady Tamil News

வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகள்: பரீட்சை ஆணையாளர் தகவல்

0

க.பொ.த உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பரீட்சைக்கு தோற்றிய 269,613 விண்ணப்பதாரர்களில் 27,970 பேர் சகல பாடங்களிலும் சித்தியடையவில்லை என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரதெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 10.04 வீதமானவர்கள் சகல பாடங்களிலும் சித்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ‘‘இவ்வருட பரீட்சை பெறுபேறுகள் சாதனை அதிகரிப்பை காட்டுகின்றது.

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள்
விண்ணப்பித்தவர்களில் 173,444 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். மூன்று பாடங்களிலும் 10,484 பரீட்சார்த்திகள் சித்தியடைந்துள்ளனர்.

இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றிய 190 விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 146 தனியார் விண்ணப்பதாரர்களும் 44 பாடசாலை விண்ணப்பதாரர்களும் உள்ளனர்.

2023 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் ஆண் பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை வீழ்ச்சியையும் பெண் பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை அதிகரிப்பையும் காட்டுகின்றது.

இலங்கைக் கல்வி முறைமை
மேலும், பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களில் 27,000 பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடையாமை இலங்கைக் கல்வி முறைமையில் பாரிய பின்னடைவை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயர்தர மீள் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக பரீட்சை திணைக்களத்தின் ஒன்லைன் முறையானது ஜூன் மாதம் 5 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை திறக்கப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.