‘40ம் நமதே, நாடும் நமதே’: தட்டி தூக்கிய ஸ்டாலின் – உற்சாகத்தில் தொண்டர்கள்!
தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்க தொடங்கியுள்ளது.
தமிழக நாடாளுமன்ற தேர்தல்
கடந்த ஏப்ரல் 19, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.
இதில் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், மதிமுக, உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியும், தேமுதிக, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய அதிமுக கூட்டணியும்,
பாமக, அமமுக, தமாகா, தமமுக, இஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய பாஜக கூட்டணியும், தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சியும் களத்தில் நின்றன.
வாக்கு எண்ணிக்கை
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (4 ஜூன் 2024 ) காலை முதல் நடை பெற்று வருகிறது.
தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில், பாமக சார்பில் போட்டியிட்ட சௌமிய அன்புமணி வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்தார். மாலை 4 மணி நேர களநிலவரப்படி தருமபுரியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ. மணி முன்னிலை வர தொடங்கியுள்ளார்.
விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில், பாமக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூரை விட சிறிய வாக்கு விதியசத்தில் முன்னிலை பெற்று வந்தார். தற்பொழுது மாணிக் தாகூர் முன்னிலை பெற தொடங்கியுள்ளார்.
மற்ற அனைத்து தொகுதிகளிலும் ஆரம்பம் முதலே இந்தியா கூட்டணியினர் முன்னிலை பெற்று வந்துள்ளனர். தற்போதைய களநிலவரப்படி மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியினர் முன்னிலையில் உள்ளனர். பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி உறுதியானதை தொடர்ந்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட தொடங்கி உள்ளனர்.