இந்திய தேர்தல் முடிவுக்குப் பின் ரணில் வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு!
இந்திய மக்களவை தேர்தலின் முடிவுகள் வெளியான பின்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe )முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நிறைவடையும் நிலையில், யார்? வெற்றிப்பெற்றுள்ளனர். எந்த கூட்டணி ஆட்சியமைக்க போகிறது என்பது தொடர்பிலான விபரங்கள் சில மணிநேரங்களில் வெளியாகும் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதனை தொடர்ந்து அதிபர் ரணில் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட உள்ளதாக கூறப்படுகின்றது.
ரணில் முக்கிய அறிவிப்பு
மேலும், இலங்கை அதிபர் தேர்தல் தொடர்பிலேயே அதிபர் ரணில் விக்ரமசிங்க முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடுவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அறிவிப்பு பெரும்பாலும், இன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடும் நிலையில், பெரும்பாலும் பொது வேட்பாளராகவே களமிறங்குவார் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, புதிய பிரதமருக்கு வாழ்த்து கூற அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 9 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.