;
Athirady Tamil News

இணையவழியாக தகாத முறைக்கு உட்படுத்தப்படும் குழந்தைகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

0

ஒவ்வொரு வருடமும் இணையவழி ஊடாக 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு சுரண்டலுக்கு பலியாகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவல் எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், உலகளவில் எட்டு குழந்தைகளில் ஒருவர், அதாவது 12.6%, கடந்த ஆண்டில் தகாத படங்கள் மற்றும் காணொளிகள், அரட்டைகள் மற்றும் நிர்வாணப் படங்களைப் பகிர்தல் ஆகியவற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

ஆய்வு
இந்த தரவுகளின்படி, உலகில் சுமார் 302 மில்லியன் இளைஞர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

கூடுதலாக, உலகளவில் 12.5% ​​குழந்தைகள் அல்லது 300 மில்லியன் குழந்தைகள் தகாத உறவு கோரிக்கைகள் உட்பட தேவையற்ற உள்ளடக்கம் கொண்ட இணைப்புகளை அணுகியுள்ளனர்.

தகாத முறைக்கு ஆளாகும் குழந்தைகளின் புகைப்படங்களை ஆன்லைனில் இரகசியமாக வைத்து பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் கேட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.