வரைபடத்தில் இருந்தே… 10 நிமிடங்கள் தான்: ஐரோப்பிய நாட்டுக்கு மிரட்டல் விடுத்த புடினின் நண்பர்
உலக வரைபடத்தில் இருந்தே வெறும் பத்தே நிமிடத்தில் போலந்தை அழித்துவிட ரஷ்யாவால் முடியும் என்று விளாடிமிர் புடினின் நண்பர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பத்தே நிமிடங்களில் மொத்தமாக
இராணுவ ஆய்வாளரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருக்கமானவருமான Konstantin Sivkov போலந்துக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை பதிவு செய்துள்ளார்.
போலந்தின் ஒவ்வொரு முதன்மை நகரங்களுக்கும் இரண்டு அணு ஏவுகணை போதும் என்றும், பத்தே நிமிடங்களில் மொத்தமாக அழித்துவிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நேட்டோ நாடுகள் தொடர்பில் விவாதித்துள்ள Konstantin Sivkov, போலந்தை எடுத்துக்கொள்வோம், அந்த நாட்டில் 20 பெரு நகரங்கள் இருக்குமா? ஒவ்வொரு நகரத்திற்கும் இரண்டு அணு ஏவுகணைகளை ஒதுக்கினால், வெறும் 30-40 ஏவுகணைகளால் போலந்தை அழித்துவிடலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போருக்கு தயார் நிலையில்
வெறும் 15 நிமிடங்களுக்குள் போலந்தும் போலந்து மக்களும் மறைந்து விடுவார்கள். போலந்து மொழியும் அழிந்துவிடும். ரஷ்யாவின் பலம் வாய்ந்த Iskander ஏவுகணை தான் பொருத்தமாக இருக்கும் என்றும் Konstantin Sivkov தெரிவித்துள்ளார்.
ஆனால் இப்படியான ஒரு சூழல் உருவாகும் என்று ஏற்கனவே கணித்துள்ள போலந்து 175,000 வீரர்களை போருக்கு தயார் நிலையில் வைத்துள்ளது. மட்டுமின்றி சமீப மாதங்களில் ராணுவ தளவாடங்களுக்கு என 16 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது.
அத்துடன் இந்த ஆண்டிற்கான ராணுவ பட்ஜெட் என்பது 27 பில்லியன் பவுண்டுகள் என்றே கூறப்படுகிறது.