ஒலிம்பிக் போட்டிகளின்போது பாரீஸில் வன்முறை வெடிக்கும்: வதந்திகளை பரப்பிவரும் நாடு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின்போது வன்முறை வெடிக்கும் என்பதுபோன்ற வதந்திகளை ஒரு நாடு பரப்பிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நாடு ரஷ்யா.
ஒலிம்பிக் போட்டிகளின்போது வன்முறை வெடிக்கும்
இஸ்ரேல் ஹமாஸ் மோதல்கள் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், அவற்றால் ஒலிம்பிக் போட்டிகளும் பாதிக்கப்படும் என்பது போன்ற செய்திகளை ரஷ்யா பரப்பிவருகிறது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், ஒலிம்பிக் போட்டிகள் வன்முறையால் பாதிக்கப்படும் என்னும் எண்ணத்தை உருவாக்குவதற்காக, நடிகர்களை வைத்து செய்தி தளங்கள், மற்றும் முழுநீள ஆவணப்படங்களை ரஷ்யா உருவாக்கியுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து விளக்கம் கேட்பதற்காக ஊடகங்கள் லண்டனிலுள்ள ரஷ்ய தூதரகத்தை தொடர்புகொண்டபோது, தூதரக அதிகாரிகள் அவற்றிற்கு எந்த பதிலும் அளிக்கவில்லையாம்.