வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக Opportunity Card அறிமுகப்படுத்திய ஜேர்மனி
திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை வரவேற்பதற்காக புதிய விசா முறையை ஜேர்மனி அறிமுகப்படுத்தியது.
ஜேர்மனியில் பொறியியல், தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளில் திறமையான நிபுணர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
ஜேர்மனி சுமார் 400,000 திறமையான தொழிலாளர்களின் தேவையை எதிர்கொள்கிறது.
இத்தகைய தொழிலாளர் வெற்றிடத்தை நிரப்ப, ஜேர்மனி தனது skilled worker visa விதிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செயல்படுத்தியுள்ளது.
அந்தவகையில், ஜேர்மனி Opportunity Card (Chancenkarte) எனும் புதிய விசா முறையை ஜூன் முதலாம் திகதி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த Opportunity Card, ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளைச் சேர்ந்த திறமையான தொழிலாளர்கள் வேலை தேடுவதற்காக ஜேர்மனிக்குள் நுழைவதற்கு புள்ளிகள் அடிப்படையிலான அமைப்பை வழங்குகிறது.
இது ஜேர்மனியில் வெளிநாட்டு தொழில்முறை தகுதிகளின் அங்கீகாரத்தை நெறிப்படுத்தவும் முயல்கிறது என ஜேர்மன் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.