;
Athirady Tamil News

இது ஒரு வரலாற்று சாதனை; 10 ஆண்டுகால நல்லாட்சி தொடரும்…பிரதமர் மோடி உருக்கம்!

0

கடந்த 10 ஆண்டுகால நல்லாட்சி தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வரலாற்று சாதனை
இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது.

அதிலும், பா.ஜ.க தனிப்பெரும்பான்மைக்கான இடங்களை தொடாமல் 240 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்தியா கூட்டணி 230 இடங்களை கைபற்றியது. இந்த நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

பிரதமர் மோடி
இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனை. மக்களின் இந்த பாசத்திற்காக நான் தலைவணங்குகிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், கடந்த 10 ஆண்டுகால நல்லாட்சி தொடரும்.வெற்றிக்காகக் கடினமாக உழைத்த பாஜக தொண்டர்களை வணங்குகிறேன்.

அவர்களது கடின உழைப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாதுன் என்று தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, பாஜக தனிப்பெரும் கட்சியாக சுமார் 240 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 291 தொகுதிகளில் முன்னிலையிலும் உள்ளது.

எனினும், காங்கிரஸ் கட்சியின் 99 இடங்களுடன் சேர்ந்து இந்தியா கூட்டணி 233 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 272 தொகுதிகளை பெறும் கட்சியால் மற்றுமே ஆட்சி அமைக்க முடியும். எனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைக் கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.