1555’இல் எழுதப்பட்டுவிட்டது – மோடி தான் ஆள்வர்!! பிரெஞ்சு தீர்க்கதரிசியின் கணிப்பு வைரல்!!
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் மோடி மீண்டும் பதவியேற்கும் சூழல் உருவாகியுள்ளது.
நரேந்திர தாமோதரதாஸ் மோடி
2014-ஆம் ஆண்டிற்கு முன்பு, இவரை குறித்து கேட்டிருந்தால் சாமானிய மக்களுக்கு பெரிதாக தெரிந்திருக்காது. ஆனால், இன்று இந்தியா மட்டுமின்றி பல உலகநாடுகளில் அறியப்பட்ட தலைவராக உயர்ந்துள்ளார் நரேந்திர தாமோதர தாஸ் மோடி.
இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் 3-வது முறையாக மீண்டும் அரியணை எரிய இரண்டாவது தலைவர் இவரே. இதற்கு முன்னர் இதனை செய்து காட்டியவர் நேரு மட்டுமே. உலகநாடுகளில் இருந்து வாழ்த்து மழை மோடிக்கு பெய்து வருகின்றது.
நாட்டின் முதல் பெரிய கட்சியாக பாஜக இம்முறையும் நீடிக்கிறது. தனித்து அக்கட்சி 240 இடங்களை குவித்து விட்டது. பல மாநிலங்களில் குஜராத், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம் போன்ற இடங்களில் கிளீன் ஸ்வீப்.
மோடி குறித்து பலரும் விவாதிக்க துவங்கிவிட்ட நிலையில், அவரின் தலைமையிலான இந்த வெற்றியை சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் கணித்துவிட்டார் என்ற தகவல் வைரலாகி வருகின்றது.
நாஸ்ட்ராடாமஸ் என்ற பெயர் கொண்ட இந்த உலக புகழ் பெற்ற தீர்க்கதரிசி 2014 முதல் மோடி தான் ஆட்சி செய்வார் என்பதை அவர் வாழ்ந்த காலகட்டத்திலேயே கணித்து விட்டதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ முன்னர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அவர் வெளியிட்டிருந்த பதிவில்,
பிரெஞ்சு தீர்க்கதரிசி நோஸ்ட்ராடாமஸ் 2014 முதல் 2026 வரை, ஒரு மனிதன் இந்தியாவை வழிநடத்துவார், ஆரம்பத்தில் மக்கள் வெறுப்பார்கள், ஆனால் அதன் பிறகு மக்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள், அவர் நாட்டின் அவலத்தையும் திசையையும் மாற்றுவதில் ஈடுபடுவார் என்று எழுதினார்.
இது 1555 இல் கணிக்கப்பட்டது. ஒரு நடுத்தர வயது வல்லரசு நிர்வாகி இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் பொற்காலத்தை கொண்டு வருவார். அவரது தலைமையில் இந்தியா உலகளாவிய மாஸ்டர் ஆக மட்டும் அல்ல, பல நாடுகள் இந்தியாவின் புகலிடமாக வரும்.
நோஸ்ட்ராடாமஸ் பழைய கையெழுத்துப் பிரதிகளில்
அவரது IV – 50-ஆம் சாரத்தில்,
2014 முதல் இந்துக்கள் ஆட்சி செய்வார்கள்
அவர்கள் வானத்தையும் பூமியையும் ஆள்வார்கள்
ஆசியாவில் யாரும் அவர்களை எதிர்க்க மாட்டார்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவின் தலைசிறந்த தலைவர் குஜராத் மாநிலத்தில் பிறப்பார்
அவர் அப்பா ஒரு கடையில் டீ விற்பார்
முதல் பெயர் நரேந்தஸ் (நரேந்திரா)