நாடு முழுவதும் புதிய தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டம்
நாடு முழுவதும் 10 புதிய தாவரவியல் பூங்காக்களை அமைக்கவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
காலி, வவுனியா, அம்பாறை (Ampara), பொலன்னறுவை (Polonnaruwa), தெனியாய உள்ளிட்ட பிரதேசங்களில் இதனை நிறுவுவதற்கான திட்டங்களை பிரதமர் இன்று (05) நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
தாவரவியல் பூங்கா
இதனடிப்படையில், காலி (Galle), அக்மீமன ஆகிய இடங்களில் சதுப்புநில தாவரவியல் பூங்காவையும், வவுனியா (Vavuniya), அம்பாறை, பொலன்னறுவை மற்றும் தெனியாய ஆகிய இடங்களில் தாவரவியல் பூங்காவையும் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்தத் துறையில் சிறந்த அறிவைக் கொண்ட அனுபவமிக்க நிபுணர்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இம்முயற்சியின் பலன்களை அப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டுமின்றி, பள்ளிக் குழந்தைகள் உட்பட நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் மேம்படுத்தும் வகையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.