;
Athirady Tamil News

நெதன்யாகுவிற்கு எதிரான பிடியாணை : செனட்சபையால் நிறைவேற்றப்பட்ட சட்டம்

0

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு (Benjamin Netanyahu) எதிரான பிடியாணை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க செனட்பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க செனட் பிரதிநிதிகள் சபையில் உள்ள இஸ்ரேல் (Israel) சார்பு குடியரசுகட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த சட்டமூலத்தை செனட் சபை ஏற்றுக்கொண்டுள்ளது.

அமெரிக்க குடியரசு கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள செனட்பிரதிநிதிகள் சபையில் 247 பேர் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன் 155 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

ஜனநாயக கட்சி
இஸ்ரேலை ஆதரிக்கும் ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதோடு இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் அது சட்டமாக மாற்றப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை செனெட்டில் பெரும்பான்மையை கொண்டுள்ள ஜனநாயக கட்சியினர் இந்த சட்டமூலத்தை நிராகரிப்பார்கள் எனவும் செனெட்டின் ஆதரவு கிடைத்தால் மாத்திரமே இந்த சட்டமூலம் சட்டமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் (Joe Biden) இந்த சட்டமூலத்தை கடுமையாக எதிர்க்கின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.