;
Athirady Tamil News

இந்த நாட்டு புலம்பெயர்ந்தோர் விரைவாக நாடுகடத்தப்படுவார்கள்: ஜேர்மனி உள்துறை அமைச்சர்

0

ஜேர்மனியில் சமீபத்தில் ஆப்கன் நாட்டவரான புலம்பெயர்ந்தோர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் பொலிசார் ஒருவர் உயிரிழந்த விடயம் அரசியல் வட்டாரத்தில் கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது.

ஆகவே, நாட்டின் நலனுக்கு அச்சுறுத்தல் என கருதப்படும் ஆப்கன் நாட்டு புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த ஜேர்மனி திட்டமிட்டுவருகிறது.

திடீர் தாக்குதல்
கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஜேர்மன் நகரமான Mannheimஇல் இஸ்லாம் எதிர்ப்புப் பேரணி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஒருவர் அங்கிருந்தவர்களைக் கத்தியால் தாக்கத் துவங்கினார்.அந்த தாக்குதலில் பொலிசார் ஒருவர் உட்பட ஆறு பேருக்கு காயங்கள் ஏற்பட்டன. தாக்குதலில் காயமடைந்த அந்த பொலிசார் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துவிட்டார்.

இந்த விடயம் ஜேர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கன் நாட்டவரான அந்த தாக்குதல்தாரியின் பெயர் Sulaiman Ataee (25) என பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர் 2013ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியின் Hesse மாகாணத்தில் வாழ்ந்துவருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆப்கன் நாட்டு புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த திட்டம்
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டின் நலனுக்கு அச்சுறுத்தல் என கருதப்படும் ஆப்கன் நாட்டு புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த ஜேர்மனி திட்டமிட்டுவருவதாக ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்ஸி ஃப்ரேஸர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நலனுக்கு அச்சுறுத்தல் என கருதப்படுவோரை விரைவாக நாடுகடத்தப்படவேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றார் அவர்.

பாதிக்கப்படுவோர் என கருதப்படுவோரைவிட, ஜேர்மனியின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறிய நான்ஸி, நாடுகடத்தல் தொடர்பான நடைமுறைகளை வேகப்படுத்த அரசு ஏற்கனவே முயற்சி செய்துவருகிறது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.