ஹமாஸை அழிக்கும் திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது: அமெரிக்காவுக்கு இஸ்ரேல் பதிலடி
ஹமாஸை அழிக்கும் இஸ்ரேலின் திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என இஸ்ரேலிய இராணுவத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின்(Joe Biden) முன்மொழிவு தொடர்பில் எதிர்ப்புக்கள் வலுப்பெறஆரம்பித்துள்ள நிலையில், ”முன்மொழிவை அறிவிக்க நாங்கள் அனுமதி கோரவில்லை” என அமெரிக்க அதிகாரியொருவர் கூறியிருந்தார்.
இதற்கு பதில் வழங்கும் விதமாக இஸ்ரேல் தரப்பு மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளது.
காஸாவின் நிலைமை
“காஸாவின் நிலைமை குறித்து நாங்கள் உரை நிகழ்த்தப் போவதாக இஸ்ரேலியர்களிடம் தெரிவித்தோம்.
அது தொடர்பில் நாங்கள் விரிவாகப் பேசவில்லை. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அறிவிப்பு மற்றும் அவர் வெளிப்படுத்திய திட்டத்தை முன்னெடுக்கும் முகமான ஒப்பந்தம் போர்நிறுத்தத்திற்கான நம்பிக்கையை உயர்த்தவும் நெத்தன்யாகு மீது அழுத்தம் கொடுக்கும் திட்டமாக இருந்தது.” என்று அமெரிக்க தரப்பு கூறியிருந்தது.
இந்நிலையில் இதற்கு பதில் வழங்கியுள்ள இஸ்ரேல் தரப்பானது, ”பைடன் நெத்தன்யாகுவை தனது முன்மொழிவை ஏற்க வைக்க முயற்சிக்கிறார்.
ஹமாஸை அழிக்கும் இஸ்ரேலை யாராலும் தடுக்க முடியாது. இஸ்ரேல் அதன் தேசிய நலனுக்கு மாறாக செயல்பட அழுத்தம் ஏற்படுத்தும் என்ற கருத்து முட்டாள்தனமானது.
மேலும், ஹமாஸ் மீது அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்”என கூறப்பட்டுள்ளது.