;
Athirady Tamil News

கடவுளின் உத்தரவில் பெண்களை கொன்றதாக நீதிமன்றில் கூறிய நபர்

0

கனடாவில் நபர் ஒருவர், கடவுளின் உத்தரவில் பெண்களை கொன்றதாக நீதிமன்ற விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

நான்கு பெண்களை தொடர் படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஜெரமி ஸ்கிபிகி என்ற நபரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த தடயவியல் உளவியல் நிபுணர் டொக்டர் சோஹொம் டாஸ் இந்த விபரங்களை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபரை பரிசோதனை செய்ததன் மூலம் அவர் எதனால் இந்த படுகொலைகளை மேற்கொண்டார் என்பதனை தெரிந்து கொண்டதாக டொக்டர் டாஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்கிபிக்கி உளவியல் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடவுளினால் அனுப்பி வைத்த நபராக தன்னை உருவகப்படுத்தி குறித்த நபர் இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இனக்குரோத அடிப்படையில் இந்த படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டதாக சட்டத்தரணிகள் ஸ்கிபிக்கி மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஸ்கிபிக்கியின் மருத்துவ அறிக்கைகளையும் அவரது சமூக ஊடகப் பயன்பாட்டையும் முழுமையாக ஆராய்ந்ததுடன் இரண்டு தடவைகள் நேர்காணல் செய்ததாக டொக்டர் டாஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் நான்கு பெண்களை கொடூரமாக படுகொலை செய்திருந்தார் என நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.